வங்கக்கடலில் இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை?
வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பாதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை(26-07-2025) மறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், ஞாயற்றுக்கிழமை 27ஆம் திகதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் மாலை, இரவு நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |