வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்தம்.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
மேலும், இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.

டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |