காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது..,
"வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை. ரெட் அலர்ட் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக விடுக்கப்படுகிறது.
ஒரு சில மணி நேரத்திற்காக இந்த ரெட் அலர்ட் அல்ல, 24 மணி நேரத்திற்கும் கொடுக்கப்படுகிறது.
இன்னும் கரையை கடக்கவில்லை என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது" என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |