உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் கனமழை?
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கிழக்கு மத்திய அரபிக்கடலின் வட கர்நாடகா - கோவா கடலோரப்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது நிலவிவந்தது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது.
இது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவில் இன்னும் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்வதால், கர்நாடகா கடலோர பகுதிகள், கோவா, குஜராத் ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழ்நாட்டில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |