எண்ணெய் விலை சரிவால் போரை முடித்துக்கொள்ள புடின் முன்வருவார்... ட்ரம்பின் நம்பிக்கை
ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக்கொண்டுவர விரும்புவதாகவும், சமீபத்திய எண்ணெய் விலை வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமைதியை நோக்கி அதிக ஆர்வம் காட்டுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர
திங்களன்று ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ட்ரம்ப், எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது, உக்ரைன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவே சரியான தருணம், உக்ரைன் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பொருளாதாரத்திற்கு முதன்மையான பங்களிப்பை அளிக்கும் எண்ணெய் விலை ஆண்டு பிறந்ததில் இருந்து இதுவரை பீப்பாய் ஒன்றிற்கு 15 டொலர் வரையில் சரிவடைந்துள்ளது.
இந்த நிலையில், எண்ணெய் விலை சரிவடைந்ததால் போர் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி ட்ரம்ப் நம்புகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக உக்ரைன் போர் அமைந்துள்ளது.
மட்டுமின்றி, பனிப்போரின் தீவிரத்திற்குப் பிறகு ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய மோதல் இதுவென்றும் கூறுகின்றனர். உக்ரைன் போரினால் லட்சக்கணக்கான வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்,
எந்த பயனும் இல்லை
மேலும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு மறைமுகப் போராக தனது நிர்வாகம் சித்தரிக்கும் இரத்தக்களரிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
புடின் முன்வைத்த 3 நாள் போர் நிறுத்தம் குறித்து விமர்சித்த ட்ரம்ப், மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தால் எந்த பயனும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பெரும்பாலான ஊடகங்கள் இதுவரை தெரிவித்ததை விட உக்ரைன் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |