பிரித்தானியாவில் ஆண், பெண்ணுக்கு மிகக்குறைந்த ஆயுட்காலம் கொண்ட நகரங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் இரண்டு நகரங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகக்குறைந்த ஆயுட்காலம் கொண்டவை என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியளித்துள்ளது.
கிளாஸ்கோ
ஒரு காலத்தில் பேரரசின் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்ட கிளாஸ்கோவில், பெண்கள் 78.3 ஆண்டுகள் மட்டுமே வாழ வாய்ப்புள்ளது என புள்ளி விவரம் கூறுகிறது. இது பிரித்தானியாவின் சராசரியை விட ஒரு தசாப்தத்திற்கும் குறைவானது.
இதுகுறித்து ஸ்கொட்டிஷ் கன்சர்வேடிவ் சுகாதார அமைச்சரவை செயலாளர் Sandesh Gulhane கூறுகையில், "SNP அமைச்சர்கள் இந்த குறைந்த ஆயுட்கால விகிதங்களை மிக நீண்ட காலமாக நிவர்த்தி செய்யத் தவறிவிட்டனர்.
அவர்களின் தோல்விகள் ஸ்கொட்லாந்தின் போதைப்பொருள் இறப்புகள் ஐரோப்பாவில் மிக மோசமானவை. 2008க்கு பிறகு மதுவால் உண்டான இறப்புகள் அதிகரித்துள்ளன. கிளாஸ்கோவில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அவசரமாக முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.
Blackpool
அதேபோல் Blackpoolயில் ஆண்களின் வாழ்நாள் 73.6 ஆண்டுகள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நகரம் போதைப்பொருள், மனநலப் பிரச்சனைகள் மற்றும் மோசமான உடல்நலக் குறைவு போன்ற வரலாற்றுப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதால், நிர்வாகத்தில் மாற்றத்தைக் கோரியது.
Lancashireயில் உள்ள உள்ளூர்வாசிகள் மலிவான பானம், போதைப்பொருள் மற்றும் கபாப்கள் அவர்களின் ஆயுட்காலத்தைக் குறைப்பதாகக் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |