யாழ் மத்திய கல்லூரியின் 2 கிரிக்கெட் நட்சத்திரங்கள்: LPL தொடரின் யாழ்ப்பாண கிங்ஸ் அணிக்கு மீண்டும் தெரிவு
யாழ் மத்திய கல்லூரியின் இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இவ்வருட LPL தொடரின் யாழ்ப்பாண கிங்ஸ் அணிக்கு மீண்டும் தெரிவு.
இலங்கையில் இவ்வாண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஐ ரஸ்காந் மற்றும் விதுசன் ஆகிய 2 கிரிக்கெட் வீர்ர்கள் யாழ் கிங்ஸ அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் வடபகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்த யாழ் மத்திய கல்லூரிக்கு பல வருடங்களாக தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் வியாஸ்காந் அவர்கள் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு மட்டும் அன்றி கடந்த 3 வருடங்களாக LPL தொடரில் தொடர்ந்து விளையாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் அணிக்காக தெரிவு செய்யப்பட்ட விதுசன் அவர்கள் கொழும்பின் பிரபலமான முதலாம் தர Moors Club அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியது மட்டும் அன்றி அவர் அவ் அணிக்காக இவ்வருடம் மிக்க் கூடுதலான விக்கட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இத்திறமையானது தங்களது கல்லூரிக்கு மட்டும் அன்றி எல்லா தமிழ் மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது என்பது மிகையாகாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |