கனடாவில் இருந்து பேசிய பெண்! நம்பி பேசிய 15 வயது இந்திய சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி
கனடாவில் இருக்கும் பெண் போன்று சிறுமிகளிடம் பேசிய ஆபாச வீடியோக்களை இந்தியாவைச் சேர்ந்த நபர் பெற்று மிரட்டி வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், கனடாவில் இருந்து பேசுவதாக கூறி, பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அதன் பின் அந்த சிறுமியிடன் தொடர்ந்து பேசி வந்த அவர், தன் மீது நம்பிக்கை வரும் வகையில், பல ஆசை வார்த்தைகளை வீசியுள்ளார்.
இதனால், அந்த பெண்ணின் முழு பேச்சை நம்பிய அந்த சிறுமி அவர் சொல்வதை எல்லாம் நம்பியுள்ளார். அப்படி ஒரு கட்டத்தில், அந்த பெண் இவரின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்க, உடனே அந்த சிறுமியும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் அந்த சிறுமியிடம் பெண்ணாக பேசிக் கொண்டிருந்த அந்த பெண், திடீரென்று ஆண் குரலில் பேசியுள்ளார். அதன் பின் நான் தான் இத்தனை நாட்கள் பெண்ணாக பேசி உன்னிடம் நடித்து வந்தேன்.
என்னுடைய ஆசைக்கு இணங்கும் படி மிரட்டியுள்ளார். அப்படி நீ நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், நீ அனுப்பிய அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி டெல்லி பொலிசிடம் கடந்த 27-ஆம் திகதி புகார் அளித்துள்லார். அந்த சிறுமி தெரிவித்த விவரங்களை வைத்து பொலிசார் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு நோட்டீஸ் அனுப்பி அந்த நபரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டனர்.
சிறுமியை மிரட்டிய நபர் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு ஏசி மெக்கானிக் என்றும் அவரது பெயர் அப்துல் சமது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரின் வீட்டிற்கே சென்ற கைது செய்த பொலிசார்,அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அப்துல் சமது யூடியூப் மூலம் சமூக வலைதள மோசடி வேலைகள் குறித்தும் உள்ளூரில் இருந்து கொண்டே வெளிநாட்டு எண்களை போல் அழைக்கு Text Now போன்ற செயலிகள் குறித்தும் அறிந்துள்ளார்.
இதையடுத்து அந்த செயலிகளைப் பயன்படுத்தி கனடாவில் இருந்து பேசும் பெண்ணாக தன்னை காட்டிக் கொண்டு இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் நட்பாக பழகி அவர்களது ஆபாச வீடியோக்களை பெற்று அவர்களை மிரட்டுவதையே வேலையாக கொண்டிருந்துள்ளார்.
இவரது செல்போனில் இருந்து சிறுமிகளின் ஏராளமான வீடியோக்கள், போன் எண்களை பறிமுதல் செய்த பொலிசார், அவரின் சமூகவலைத்தளங்களை சோதித்த போது, அதில்,
அழகான பெண்ணின் படத்தை வைத்திருப்பது தெரியவந்தது.
இவர் இது போன்று பல ஐடிக்கள் சமூகவலைத்தளங்களில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.