264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய இளைஞருக்கு அனைத்திலும் விழுந்த பரிசு! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற இளைஞர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.
இதன் ஒரு டிக்கெட்டின் விலை $1 ஆகும். அதன்படி அனைத்து டிக்கெட்களுக்கு சேர்ந்து மொத்தமாக $132,000 (இலங்கை மதிப்பில் 2,67,98,706.00) பரிசு விழுந்துள்ளது.
முதலில் 104 டிக்கெட்களை வாங்கிய அவர் பிறகு 160 டிக்கெட்களை வாங்கியிருக்கிறார்.
அனைத்து டிக்கெட்களையும் டைலர் பல்பொருள் அங்காடியில் வாங்கியிருக்கிறார். இப்படி வாங்கிய அனைத்து டிக்கெட்களுக்கும் பரிசு விழுந்துள்ளதால் டைலர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பரிசு பணத்தை சேமித்து அதை முதலீடு செய்யும் திட்டத்தை வைத்துள்ளார் டைலர்.