மனைவியை பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்த கணவன் மன உளைச்சலில் விபரீத முடிவு
மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்த கணவன் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த இந்த துயர சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரட்டன்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது சுனில் குமார். தையல்காரரான இவர் தனது மனைவியின் வெளிநாட்டு பயணத்தை ஏற்பாடு செய்த பின்னர், அவர் தொடர்பை முறித்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி கிரண்தீப் கவுர்க்கு பிரித்தானியா செல்ல விசா கிடைக்கச் செய்வதற்காக, அந்த நபர், தனது மனைவியை விவாகரத்து செய்து, மற்றொரு நபரான குர்ப்ரீத் என்பவருடன் திருமணம் செய்து வைத்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஒப்பந்தப்படி, பிரித்தானியா சென்ற பின், அவர் குர்ப்ரீத்தை விவாகரத்து செய்து, மீண்டும் முதல் கணவருடன் சேர வேண்டும் என திட்டமிடப்பட்டது.
ஆனால், மனைவி ஆகஸ்ட் மாதம் பிரித்தானியா சென்ற பின், கணவரின் அழைப்புகளைத் தவிர்த்து, அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டார்.
இதனால், மன உளைச்சலில் ஆழ்ந்த இளைஞர், காடி டோகாட் கிராமம் அருகே உள்ள கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
“அவர் தனது நிலத்தை விற்று, மனைவியின் பயணச் செலவுகளை ஏற்பாடு செய்தார். அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தது. ஆனால், அவர் சென்ற பின் தொடர்பை முறித்துவிட்டார். இதை அவர் தாங்க முடியவில்லை” என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் அப்பெண்ணையும் அவரது பெற்றோர்களையும் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் மோசடி குற்றச்சாட்டில் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம், வெளிநாட்டு வாழ்க்கைக்காக குடும்ப உறவுகளை தியாகம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ludhiana man suicide UK migration, Punjab tailor wife UK visa tragedy, Man helps wife remarry for UK travel, Wife blocks husband after UK arrival, Punjab canal suicide Ludhiana news, Ex-wife remarriage migration scam case, Ludhiana family alleges cheating UK pact, Punjab police abetment to suicide case, Indian migration tragedy UK connection, Emotional distress Ludhiana suicide news