ஜேர்மனியில் Lufthansa விமான நிறுவன பணியாளர்கள் வேலைநிறுத்தம்
ஜேர்மனியில், Lufthansa விமான நிறுவன விமானப் பணியாளர்கள் யூனியன், நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
வேலைநிறுத்தம் குறித்து பேசிய UFO யூனியன் தலைவரான Joachim Vazquez Bürger, தாங்கள் ஈஸ்டர் மற்றும் வங்கி விடுமுறைகளைக் கருத்தில் கொண்டு பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அந்நாட்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்கிறார்.

ஆனாலும், விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பு நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படத்தான் செய்யும் என்றும், அதற்காக வருந்துவதாகவும், என்றாலும், அதற்கு Lufthansa நிறுவனம்தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
ஆக, நாளை நடைபெற இருக்கும் வேலைநிறுத்தத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படப்போவது உறுதியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |