ஐரோப்பாவிற்கான 20,000 விமான சேவைகள் ரத்து: லுஃப்தான்சா அதிரடி அறிவிப்பு
சுமார் 20,000 விமான சேவைகளை ரத்து செய்ய லுஃப்தான்சா(Lufthansa) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
20,000 விமானங்கள் ரத்து
விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோக தட்டுப்பாடு காரணமாக ஜேர்மனியின் பிரபல விமான சேவை நிறுவனமான லுஃப்தான்சா(Lufthansa)ஐரோப்பிய சேவைகளுக்கான 20,000 குறுகிய தூர விமான சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
சிட்டிலைன் சேவையின் முழுமையான முடக்கமே இந்த புதிய ரத்து நடவடிக்கைக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மேலும் சிட்டிலைன் துணை நிறுவனத்தை சேர்ந்த 27 விமானங்களையும் போக்குவரத்து சேவைகளில் இருந்து விலக்க லுஃப்தான்சா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எரிபொருள் விலை முக்கிய காரணமாக இருந்தாலும், ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் நிறுவனத்தின் நிதி நிலைகள் ஆகியவையும் இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கோடையில் 20,000 விமான சேவைகள் ரத்து என்பது பெரிய எண்களாக தோன்றினாலும், இது அந்த நிறுவனத்தின் பயண தூரத்தில் வெறும் 1% மட்டுமே ஆகும்.
அதே நேரத்தில் இந்த விமான சேவை ரத்து நடவடிக்கையின் மூலம் அக்டோபர் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 40,000 டன் எரிபொருள் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |