உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவோம்! பிரபல ஐரோப்பிய நாடு அச்சுறுத்தல்
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவோம் என ஐரோப்பிய நாடான பெலாரஸ் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நட்பு நாடான பெலாரஸிலிருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, தங்கள் நிலப்பரப்பில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு, பெலாரஸ் நாட்டில் இன்று பிப்பரவி 27ம் திகதி நடத்தப்படவிருக்கிறது.
இந்நிலையில், பெலாரஸிலிருந்து உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி Lukashenko உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், போரில் காயமடைந்த ரஷ்யா இராணுவ வீரர்களுக்கு பெலாரஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, உக்ரைன் மீதான போர் பெலராஸ் ரஷ்யாவுடன் இணைவோம் என Lukashenko மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.