4 வது முறையாக பிரேசில் ஜனாதிபதியான லுலா; ட்ரம்ப்பிற்கு ஏமாற்றம்
lulu wins and become brazil president 4th time பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லுலா, 4 வது முறையாக பிரேசில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4 வது முறையாக பிரேசில் ஜனாதிபதியான லுலா
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (luiz inacio lula da silva) மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோவின் மகன் பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முதல் சுற்றில், வலதுசாரி கட்சியான லிபரல் கட்சியின் பிளாவியோ போல்சோனாரோ 47.03 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டா 45.16 வாக்குகள் பெற்றிருந்தார்.
இறுதிசுற்றான 2வது சுற்றில், லூயிஸ் இனாசியோ லுலா டா 51.79 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிளாவியோ போல்சோனாரோ 48.21 வாக்குகள் பெற்றிருந்தார்.
இதன் மூலம், இனாசியோ லுலா டா சில்வா 4வது முறையாக பிரேசிலின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக 2002, 2006, 2022 ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்று பிரேசிலின் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
2018 ஜனாதிபதி தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக லூலா போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 12 ஆண்டுகால தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக 580 நாட்கள் சிறையில் இருந்த அவர், 2019ஆம் ஆண்டில் விடுதலையானார்.
ட்ரம்ப்பிற்கு ஏமாற்றம்
தென் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் வலதுசாரி ஜனாதிபதிகள் அதிகாரத்தில் உள்ள நிலையில், அந்த வலதுசாரி அலைக்கு லுலா முடிவு கட்டினார்.
21 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள பிரேசில், சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய அரிய கனிம இருப்புகளை கொண்டுள்ளது.
ட்ரம்ப் தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில், இறையாண்மையை தனது பிரச்சாரத்தில் ஒரு முக்கிய விடயமாக லூலா கருதினார். மேலும், தேர்தலில் சமூக ஊடகங்கள் மூலம் அமெரிக்க தலையீடு இருக்க கூடாது என எச்சரித்திருந்தார்.