மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்
Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.
மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் பதுங்குகுழிகள்
உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள், போர் அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பதுங்குகுழி சந்தை (Underground Bunker Market) வேகமாக வளர்ந்து வருகிறது.
2024-இல் பதுங்குகுழி சந்தையின் மதிப்பு சுமார் 3.07 பில்லியன் டொலராக இருந்தது. Spherical Insights & Consulting வெளியிட்ட அறிக்கையின் படி, இது 2035-க்குள் 9.49 பில்லியன் டொலராக உயரக்கூடும். இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர் சூழ்நிலைகள், அணு ஆயுத தாக்குதல் அபாயங்கள், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பொதுமக்கள் தனிப்பட்ட பதுங்குகுழிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பனிப்போர் காலத்தில் மக்கள் தொகை முழுவதற்கும் பதுங்குகுழிகள் கட்டப்பட்டன. ஆனால் இப்போது, செல்வந்தர்களுக்கான தனிப்பட்ட சொகுசு பதுங்குகுழிகள் (Luxury Bunkers) அதிகமாக உருவாக்கப்படுகின்றன.
2025-இல் வெளியான BBC அறிக்கையின் படி, Facebook நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் ஹவாய் தீவில் உள்ள தனது 1,400-acre நிலப்பரப்பில் தனிப்பட்ட பங்கர் ஒன்றை கட்டியுள்ளார். இதில் தனி மின்சாரம் மற்றும் உணவு வசதிகளும் உள்ளன.
உலகளாவிய பாதுகாப்பு அச்சங்கள், “Doomsday” போன்ற சூழ்நிலைகளுக்கான தயாரிப்புகள், மற்றும் செல்வந்தர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகள் ஆகிய காரணங்களால் இந்த பதுங்குகுழி சந்தை வளர்ந்துகொண்டே போகிறது.
2035-க்குள், இந்த பதுங்குகுழி சந்தை 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட சொகுசு வசதிகள் இணைந்த புதிய வணிக துறையாக உருவெடுக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |