பிரான்சில் புடினுடைய மகளுக்குச் சொந்தமான ஆடம்பர மாளிகையை கைப்பற்றிய சமூக ஆர்வலர்கள்: அடுத்து செய்த அதிரடி
பிரான்சில் அமைந்துள்ள புடினுடைய மகளுக்குச் சொந்தமான ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அதற்கு 'Villa Ukraine' என்று பெயரிட்டு, உக்ரைன் அகதிகளை வரவேற்பதற்காக அதை தயார் செய்துள்ளார்கள்.
Pierre Lapurdi என்பவரும், அவரது கூட்டாளியான Sergei Savelyev என்பவரும், தென்மேற்கு பிரான்சில் அமைந்துள்ள Biarritz என்ற நகரில் இருக்கும் ரஷ்ய அதிபர் புடினுடைய மகளான Katerina Tikhonovaவின் ஆடம்பர மாளிகைக்குள் நுழைந்து, அதில் உக்ரைன் கொடியை ஏற்றி, அதை உக்ரைன் அகதிகளை வரவேற்பதற்காக தயார் செய்துள்ளார்கள்.
அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள். ஆகவே, ரஷ்யாவிலிருந்து வெளியேறி மறைவாக இருக்கும் Vladimir Osechkin என்பவர், அவர்கள் இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ரஷ்ய செல்வந்தர்களுக்குச் சொந்தமான மாளிகைகளை உக்ரைன் அகதிகளை வரவேற்பதற்காக அவர்கள் தயார் செய்துள்ளார்கள், அவ்வளவுதான் என்றும் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் மக்களைத்தான் பாதுகாக்கவேண்டுமேயொழிய இந்த செல்வந்தர்களை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் வானொலி நிலையம் அளித்துள்ள தகவலின்படி, Biarritz நகரில் புடினுக்கு சொந்தமாக மூன்று பங்களாக்கள் உள்ளனவாம். கடந்த சில ஆண்டுகளில், புடின் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் மற்றும் ரஷ்ய உளவாளி ஒருவர் ஆகியோர் அந்த நகரில் தென்பட்டதாக கூறப்படுகிறது.