ரஷ்யா முழுமையாக கைப்பற்றிவிட்டது! ஒப்பு கொண்ட உக்ரைன்... வெளிவந்த முழு வீடியோ
உக்ரைனின் கிழக்கில் உள்ள முக்கிய நகரமான Lysychansk-ஐ ரஷ்யா முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.
நேட்டா நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது.
ராணுவ கட்டமைப்புகளை தாண்டி அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், ஆலைகள் என தாக்குதல் வரம்பை ரஷ்யா நீட்டித்ததால் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது உக்ரைனின் முக்கிய நகரமான Lysychansk-ஐ ரஷ்யா முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, Lysychanskக்கான கடுமையான சண்டையின் முடிவில் உக்ரைனிய படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ராணுவ அலுவலக ஊழியர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் புடினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே ஷோய்கு இது குறித்து பேசியுள்ளார். ரஷ்ய படைகள் நடத்திய போரில் Lysychansk நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என அவர் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.