பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற நிலையில் அவருக்கு பரிசு கொடுத்துள்ளார்.
மோடியுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர், டெல்லி சென்றவுடன் சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வணக்கம் தெரிவித்தார். பின்னர், இருவரும் அமர்ந்து கொண்டு பேசினர்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த உரையாடலில் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை மு.க.ஸ்டாலின் பரிசாக மோடிக்கு வழங்கினார்.
நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை மோடிக்கு பரிசாக வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |