விஜயை மறைமுகமாக தாக்கி பேசும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேசியது
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர், மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகள் வழங்கினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர், "ஒடுக்கப்பட்டோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
தமிழக மக்களின் மொத்த கோரிக்கைக்கும் மத்திய அரசு பணிந்து போகும். பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளோம்.
மேலும், புதியதாக கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |