தியாகம் பெரிது.. உறுதி பெரிது! செந்தில் பாலாஜியை வரவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜியின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வாசித்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 471 நாட்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ஜாமினில் வெளிவரவுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பதிவு
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.
ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடனும் பாதி பணம் மட்டுமே திருப்பி செலுத்தலாம்! இந்த திட்டம் பற்றி தெரியுமா?
அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |