மணக்கோலத்தில் காத்திருந்த திருமண ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தில் மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த திருமண ஜோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக ஒவ்வொரு பகுதிக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று திருவாரூரில் இருந்து காரில் திருக்குவளை நோக்கி ஸ்டாலின் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருவாரூர் பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரை சேர்ந்த சோப்ரா-ரமா ஆகியோர் முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
மணக்கோலத்தில் நின்ற ஜோடியை கண்டதும் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.