கிறிஸ்துமஸுக்கு முன் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்: காரணம் என்ன?
அவுஸ்திரேலியாவில் நிறுவனம் ஒன்று தன்னார்வ நிர்வாகத்தின் கீழ் வருவதால், நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலிய ஊழியர்கள் திடீர் பணிநீக்கத்தை எதிர்கொள்கின்றனர்.
நிபந்தனைகளில் மீறல்கள்
Alvarez & Marsal நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான ஜேசன் டிரேஸி மற்றும் கிளென் கனெவ்ஸ்கி ஆகியோர், முக்கிய உரிம நிபந்தனைகளில் 'மீறல்கள்' நடத்திருப்பதாக கூறினர். 
அதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் செயல்படும் MA Services Group நிறுவனம், தாமாக முன்வந்து தன்னிச்சையான நிர்வாகத்தின் கீழ் வந்ததாக தெரிவித்தது.
இதனால், அந்நிறுவனம் சில முக்கிய செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக தொடர இயலாது. இது ஆட்குறைப்புக்கும் வழிவகுக்கும்.
அபாயத்தில் ஊழியர்கள்
இதன் காரணமாக, கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 1,700 அவுஸ்திரேலிய ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். 
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், "பணியிடங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள 1,700 ஊழியர்களுக்கு, இந்த சூழ்நிலையின் தீவிரத்தை நாங்கள் உணர்கிறோம். நிறுவனம் இந்த நிலைக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை நாங்கள் விசாரித்து வருகிறோம். இதில் நிறுவனர் மற்றும் இயக்குநர் மிக்கி அஹுஜாவிடம் இருந்து தகவல்களை பெறுவதும் அடங்கும்.
ஊழியர்கள் தங்களின் உரிமைகள் தொடர்பாக தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, வேலைவாய்ப்பு மற்றும் பணியிட உறவுகள் துறையின் கீழ் உள்ள Fair Entitlement Guarantee குழுவுடன் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |