ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தகவல்
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது உடல்நிலை குறித்து தகவல் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி பரவிய நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இது கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கமளித்துள்ளார்.
இதையடுத்து, ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அச்சப்படும் அளவுக்கு எதுவுமில்லை. அவருக்கு திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்யப்படவில்லை. தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |