பாதி விலைக்கு மாடி தோட்ட ‘கிட்' விற்பனை செய்யும் தமிழக அரசு.., விலை எவ்வளவு?
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் மாடி தோட்ட ‘கிட்' மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மாடி தோட்ட ‘கிட்'
தமிழகம் முழுவதும் அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் மாடித் தோட்டத்துக்கான 'கிட்' மானிய விலையில் விற்கப்படுகிறது. வீடுகளின் மாடியில் காய்கறி தோட்டம் வளர்த்து பயன்பெறுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழகத்தில் மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் அதற்கான பொருட்களை தோட்டக்கலைத் துறை இணையதளத்தில் https://tnhorticulture.com/kit/ சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், ஒரு மாடி தோட்ட ‘கிட்' விலை ரூ.950 ஆகும். ஆனால், தற்போது 50 சதவீத மானிய விலையில் ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு மாடி தோட்ட கிட்டில், 6 கிலோ எடையுள்ள தென்னை நார்கழிவு கட்டிகள்-2, ஆறு வகையான காய்கறி விதைகள், 6விதை பொட்டலங்கள், அசோஸ்பைரில்லம் 300 கிராம், பாஸ்போபாக்டீரியா 300 கிராம், ட்ரைக்கோடெர்மா விரிடி 200 கிராம், வேப்பெண்ணெய் 100 மி.லி, மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறையை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கியிருக்கும்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் 20000 ஒரு மாடி தோட்ட கிட்கள் வழங்கப்படுகின்றன.சென்னையில் அதிகபட்சம் 3500 கிட்கள் வழங்கப்படுகின்றன. ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 மாடித் தோட்ட `கிட்'கள் வழங்கப்படும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |