தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது? பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் 35 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
அதோடு, மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 3 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தவிர, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகிய அமைச்சர்களின் துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அறையில், ‘துணை முதல்வர்’ என எழுதப்பட்ட பலகை பொருத்தப்பட்டது. அதே போல அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்திலும் ‘துணை முதல்வர்’ என்ற பெயர்ப் பலகை பொருத்தப்பட்டது. பின்னர், தனது அறையில் துணை முதலமைச்சராக அமர்ந்தார்.
எத்தனையாவது இடம்?
இந்நிலையில், 35 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 3 -வது இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளனர்.
இவர்கள், அமைச்சரவையில் எந்த வரிசையில் இடம் பெறுகிறார்களோ, அதே வரிசையில்தான் சட்டப்பேரவையிலும் அமர்வார்கள்.
அதேபோல, புதிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் 19-வது இடத்திலும், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி 21-வது இடத்திலும், 27-வது இடத்தில் அமைச்சர் கோவி.செழியனும், 29-வது இடத்தில் அமைச்சர் சா.மு.நாசரும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |