31 பந்தில் அரைசதம்: மாஸ் காட்டிய பாகிஸ்தானின் மாஸ் சதாகத்
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தானின் தொடக்க வீரர் மாஸ் சதாகத் 75 ஓட்டங்கள் விளாசினார்.
மாஸ் சதாகத்
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
சாஹிப்ஸாதா ஃபர்ஹான் நிதானமாக ஆட, மறுமுனையில் இளம் வீரரான மாஸ் சதாகத் (Maaz Sadaqat) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
முதல் அரைசதம்
சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்ட அவர் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். 20 வயதாகும் சதாகத்திற்கு இது முதல் அரைசதம் ஆகும்.
தொடர்ந்து எதிரணி பந்துவீச்சை அடித்துநொறுக்கிய அவர், 46 பந்துகளில் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
அதேபோல் சல்மான் அலி ஆகாவும் அரைசதம் அடித்தார். நிதானமாக துடுப்பாடிய அவர் 64 ஓட்டங்கள் குவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |