வெனிசுலாவில் ஆட்சிக்கு ஆசைப்பட்ட நோபல் பரிசு வென்றவர்... ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைதான நிலையில், இனி ஆட்சி அதிகாரத்திற்கு தயாராவோம் என கூறிய அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒரேயடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
செல்வாக்கு இல்லை
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கடந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கடுமையாக எதிர்த்து வந்துள்ள அவர்,

தற்போது அமெரிக்கப் படைகளால் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இனி கைப்பற்றுவோம் என முழங்கினார்.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை அவர் வென்றிருந்தாலும், நாட்டில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்றே ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரோவிற்கு நிகரான எதிரியாக மச்சாடோ பரவலாகக் கருதப்படுகிறார், ஆனால் அவருடன் தாம் தொடர்பில் இல்லை என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவருக்கு நாட்டுக்குள் செல்வாக்கோ அல்லது மரியாதையோ இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். வெனிசுலாவிலிருந்து நடப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மச்சாடோ ஆதரவு தெரிவித்த போதிலும்,
அவர் தனது நோபல் பரிசு வெற்றியை டிரம்ப்பிற்கும் தனது நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்த நிலையிலும், ட்ரம்பிடம் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா வாக்காளர்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவரான மச்சாடோ, மதுரோவின் கைது நடவடிக்கையை வெனிசுலா மக்களுக்கு சுதந்திரத்தின் நேரம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா நிர்வகிக்கும்
தற்போது ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மச்சாடோவின் ஆதரவாளரும் தொழிலதிபருமான பெத்ரோ புரேல்லி, ஜனாதிபதி ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மச்சாடோ நாட்டின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதி, வெனிசுலா திவாலாகி, வறுமையில் வாடினாலும், அது அபத்தமான தன்னிச்சையான விருப்பங்களுக்கு அடிபணியப் போவதில்லை என புரேல்லி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெனிசுலாவின் துணை ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் தான் அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவார் என்று ட்ரம்ப் அறிவித்தார்.
ஆனால், ரோட்ரிக்ஸ் அதற்கு மறுப்பு தெரிவிக்க, வெனிசுலாவை இனி அமெரிக்கா நிர்வகிக்கும் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |