புடினுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: அபாயத்தை சுட்டிக்காட்டி ஐரோப்பிய நாடுகளுக்கு மக்ரோன் அழைப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
புடினுடன் பேச்சுவார்த்தை
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும், அது அவசியமானது என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மக்ரோன், உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், ஐரோப்பா இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளில் தாங்கள் நேரடியாக பங்கேற்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்ரோன் கவலை
அமைதி பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஐரோப்பா பங்கேற்கவில்லை என்றால், அங்கு ஐரோப்பாவின் நலன்கள் புறக்கணிக்கப்படலாம் என்றும் மக்ரோன் தன்னுடைய கவலையை சுட்டிக் காட்டியுள்ளார்.

சர்வதேச தரகர்கள் மட்டும் புடினிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் அது சரியானதாக இருக்காது என்றும், ஐரோப்பா பல முக்கியமான முடிவுகளில் இருந்து விலக்கப்படும் அபாயம் இருப்பதையும் மக்ரோன் எச்சரித்தார்.
பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் ஒருங்கிணைந்து தங்கள் நிலைப்பாடுகளை எடுக்கும் போது அது சமநிலையான மற்றும் பயனுள்ள அமைதி நடைமுறையை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |