கஞ்சா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா: மருத்துவ அங்கீகாரம் வழங்கிய டிரம்ப்
அமெரிக்காவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக் கொள்கையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
கஞ்சா மீதான கட்டுப்பாடுகள் தளர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக் கொள்கையின் முக்கிய மாற்றமாக அரசின் கடும் கட்டுப்பாடு விதிகளில் இருந்து கஞ்சாவை(Marijuana) மாற்றும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

டிரம்பின் புதிய திருத்தத்தின் மூலம், கஞ்சாவானது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் சட்டத்தின்(Controlled Substances Act) கீழ் உள்ள பட்டியல் 1 லிருந்து பட்டியல் 3-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஹெராயின் போன்ற மோசமான தீங்கு விளைவிக்க கூடிய போதைப்பொருட்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்த கஞ்சா, இந்த புதிய மாற்றத்தின் மூலம் கெட்டமைன்(Ketamine) ஆகிய மருத்துவ பொருட்களின் பட்டியலில் கஞ்சா இடம்பெறும்.
மருத்துவ பயன்பாட்டிற்கு அங்கீகாரம்

இந்த உத்தரவின் மூலம், கஞ்சா தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சைகள் மீதான கூட்டாட்சி தடைகள் ஆகியவற்றில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.
மேலும் கஞ்சா மருத்துவ பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்ள கூடியது என்பதை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
அதே சமயம் இந்த உத்தரவு நாடு முழுவதும் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக மாற்றாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |