பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம்! உக்ரைன் அகதிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய போரிஸ்
உக்ரேனிய அகதிகளுக்கு உதவுவதில் பிரித்தானியா அரசாங்கம் தனது பிரமாண்டான அறிக்கைகளை கடைப்பிடிக்கத் தவறியதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மேற்கே உள்ள Versailles அரண்மனையில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் முடிவில் உரையாற்றிய மக்ரோன், பிரித்தானியாவின் விசா கொள்கையை கடுமையாக விமர்சித்தார்.
பிரித்தானியாவின் விசா கொள்கையின் படி, விண்ணப்பதாரர்கள் நேரடியாக பிரஸ்ஸல்ஸ் அல்லது பாரிஸில் உள்ள விசா விண்ணப்ப மையங்களுக்கு வர வேண்டும்.
இது போரிலிருந்து தப்பி வருபவர்களை மேலும் மோசமான நிலைமைக்கு தள்ளும் என மக்ரோன் கூறினார்.
உக்ரைன் அகதிகளுக்கு உதவது தொடர்பில் பிரித்தானியா பல பிரமாண்டான அறிக்கைகளை வெளியிட்டலாம், தொடர்ந்து விசா விதிகளை கடைப்பிடித்து வருகிறது.
இதன் மூலம் அவர்கள் உக்ரேனிய அகதிகளை வரவேற்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
போரிலிருந்து தப்பி வரும் உக்ரேனிய அகதிகள், பிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிக்க, தாங்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருப்பாக கூறுகின்றனர்.
மோசமான சூழலில் வாழ்ந்து ஐரோப்பாவைக் கடந்து பிரத்தானியா பிரதேசத்தில் உள்ள தங்கள் குடும்பங்களைச் சென்றடையும் உக்ரேனிய ஆண்களும் பெண்களும் நல்ல முறையில் நடத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என மக்ரோன் கூறினார்.
மக்ரோனுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரிதி படேலின் முந்தைய கருத்துகளை உள்துறை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது, விசா பெற, விண்ணப்ப மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கி, பிரத்தானியா செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் ஆக்கும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.