புச்சா படுகொலை...அடுத்தடுத்து குவியும் தடைகள்: ரஷ்யாவை வலுவாக கண்டிக்கும் மக்ரோன்!
உக்ரைனின் புச்சா நகரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உயிர்களுக்கு ரஷ்ய ராணுவம் தான் காரணம் என்பது தெளிவாக தெரிவதால் ரஷ்யா மீது அடுத்தகட்ட புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் வானொலியில் பேசிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பது மிகப்பெரிய போர் விதிமீறல் ஆகும், மற்றும் இதனை ரஷ்ய ராணுவ வீரர்கள் தான் செய்து இருக்கிறார்கள் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
புச்சா நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் இவை பெரும்பாலும் ரஷ்யாவின் நிலக்கரி மற்றும் எண்ணெய் ஏற்றுமதி மீதானதாக இருக்கும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு ரஷ்யா முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மேற்கத்திய ஊடகங்களுக்காக உக்ரைன் இதுபோன்ற நாடகத்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ளது.
1991ம் ஆண்டு சோவியத் யூனியன் பிரிக்கப்பட்ட போது ரஷ்யா சந்தித்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு ரஷ்யா தற்போது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெலன்ஸ்கியை குற்றம்சாட்டும் ஹங்கேரி பிரதமர்: நான்காவது முறையாக ஆட்சியமைப்பு!