ஜெலன்ஸ்கியை குற்றம்சாட்டும் ஹங்கேரி பிரதமர்: நான்காவது முறையாக ஆட்சியமைப்பு!
ஹங்கேரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றி பிரதமர் விக்டர் ஓர்பன் அசத்தியுள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்றுவரும் பொதுத்தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கையில் வலதுசாரி கட்சியான ஃபிடெஸ் கட்சி 53.1 சதவிகித வாக்குகளை பெற்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள 98 சதவிகித வாக்கு எண்ணிக்கையில், ஃபிடெஸ் கட்சி 53.1 சதவிகித வாக்குளை பெற்று 135 இடங்களையும், பீட்டர் மார்கி-ஜே தலைமையிலான எதிர்க்கட்சி 35 சதவிகித வாக்குகளுடன் 56 இடங்களையும் பெற்று இருப்பதாக தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
reuters
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தலைநகர் புடாபெஸ்டிலில் அவரது ஆதரவாளர்களிடம் பிரதமர் விக்டர் ஓர்பன் ஆற்றிய வெற்றி உரையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும், பிரஸ்ஸல்ஸ் அதிகாரிகளையும் கடுமையாக குற்றம் சாட்டி அவர்களை எதிரி என விமர்ச்சித்தார்.
மேலும் இது மிகப்பெரிய வெற்றி, இதனை அவர்கள் சந்திரனில் இருந்தும், பிரஸ்ஸல்ஸில் இருந்தும் கூட நிச்சியமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரி ரஷ்ய நடத்திவரும் போர் தாக்குதலால் உக்ரைனில் இருந்தது வெளியேறிய அரை மில்லியன் அகதிகளுக்கு தங்கும் அனுமதி வழங்கியுள்ளது ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்ய மறுத்துவிட்டது.
பிரதமர் விக்டர் ஓர்பன் கொள்கைகளுக்கு ஆரம்பம் முதலே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் தாக்குதலில் பிளான் B-க்கு மாறிய புடின்: ரஷ்யாவில் திட்டமிடப்படும் வெற்றி அணிவகுப்புers!