உக்ரைன் தாக்குதலில் பிளான் B-க்கு மாறிய புடின்: ரஷ்யாவில் திட்டமிடப்படும் வெற்றி அணிவகுப்பு!
கிழக்கு உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் 9ம் திகதிக்குள் வெற்றி பெற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் கிட்டத்தட்ட 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ராணுவம் தற்போது தலைநகர் கீவ் மற்றும் உக்ரைன் பிற பகுதிகளில் இருந்து பின்வாங்கி கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் பகுதியில் கவனத்தை திசை திரும்பியுள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்ட மடைமாற்றத்திற்கு, இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் சரணடைந்ததைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் வரும் ஏப்ரல் 9ம் திகதி நடைபெறவிருக்கும் வருடாந்திர வெற்றி அணிவகுப்பில் உக்ரைன் வெற்றியையும் கொண்டாட ஜனாதிபதி புடின் திட்டமிட்டு இருப்பதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையிலேயே வரும் ஏப்ரல் 9ம் திகதிக்குள் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் வெற்றியை பெறுவதற்காக படைகள் திசை திருப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் மத்திய மற்றும் மேற்கு உக்ரைனின் அதிகரிக்கும் வெப்பநிலை மாற்றத்தை எதிர்பார்பதால் டாங்கிகளை முன்னகர்த்தி செல்வதில் பெரும் சிரமம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எண்ணி இருப்பதாலும் இந்த முடிவு எட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவியவந்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் வீரர்களின் தீவிர தடுப்பு தாக்குதலால் ரஷ்ய ஜனாதிபதி புடினின் முதல் மூலத் திட்டமான உக்ரைனை முழுவதையும் கைப்பற்றும் திட்டம் (பிளான் ஏ) தோல்வியில் முடிந்துவிட்டது, அதனால் தான் தற்போது கிழக்கு உக்ரைனில் கவனம் செலுத்தும் "பிளான் பி" செயல்படுத்தி அதற்கு ஏப்ரல் 9ம் திகதியை காலக்கெடுவாக புடின் நிர்ணயித்துள்ளார் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளின் இந்த பின்னகர்விற்கு பிறகு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இனப்படுகொலைக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புடின் மீது கைது ஆணை பிறப்பிக்க அழைப்பு: ஐநா வழக்குரைஞர் அதிரடி!