காட்டுமிராண்டிகளால் 23 வயதில் அவரது உயிர் பறிபோனது! இமானுவல் மேக்ரான் வெளியிட்ட பதிவு
பிரான்சில் யூத எதிர்ப்பாளர்களால் கடத்திக் கொல்லப்பட்ட இளைஞர் குறித்து ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.
இளைஞர் கொலை
கடந்த 2006ஆம் ஆண்டு மொராக்கோ வம்சாவளி யூதரான இலன் ஹலிமி, பிரான்சில் யூத எதிர்ப்பாளர்களால் கடத்தப்பட்டார். அனைத்து யூதர்களும் பணக்காரர்கள் என்று நம்பிய கடத்தல்காரர்கள், ஹலிமியின் குடும்பத்தை தொடர்புகொண்டு மிகப்பெரிய தொகையை கோரினர்.
அதன் பின்னர் ஹலிமி மூன்று வாரங்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு பிரான்சில் யூத எதிர்ப்புக்கு உதாரணமாக தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
மேக்ரான் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் ஹலிமி கொல்லப்பட்டதை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நினைவு கூர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'யூத எதிர்ப்பு காட்டுமிராண்டிகளால் பிப்ரவரி 13, 2006 அன்று இலன் ஹலிமியின் உயிர் பறிக்கப்பட்டபோது அவருக்கு வயது 23. அதை நாம் மறந்துவிடவில்லை. அனைத்து வகையான வெறுப்புகளுக்கும் எதிரான போராட்டம் மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டம் தினசரி போராகும்' என தெரிவித்துள்ளார்.