புடின் தன்னிடம் என்ன சொன்னார்? உக்ரைனில் ஓபனாக கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யப் படைகள் புதிததாக எந்தவித நெருக்கடியையும் அதிகரிக்காது என்று அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்ததாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண தூதரக பயணமாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், திங்கட்சிழமை புடினுடன் சுமார் 6 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, உக்ரைனுக்கு பயணித்த மக்ரோன், அந்நாட்டு ஜனாதிபதி Zelensky-யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன் தலைவரை சந்திப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மக்ரோன், உக்ரைன் எல்லைக்கு அருகே நிலை மோசமடையவோ அல்லது எந்தவித புதிய பதற்றமோ இருக்காது என புடின் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மக்ரோன் கூறினார்.
பின்னர், Zelensky-யுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மக்ரோன், உக்ரைன், ரஷ்யாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்த தற்போது வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
மேலும், பதட்டங்களைக் குறைப்பதற்கான உறுதியான தீர்வுகளை எட்ட முடியும் என மக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைவர் உடனான சந்திப்புக்கு பின் ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு பயணித்த மக்ரோன், அங்கு உக்ரைன் பிரச்னை குறித்து ஜேர்மன் மற்றும் போலந்து தலைவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார்.