பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை குறிவைக்கும் ரஷ்யா: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்ரோன் எச்சரிக்கை
ரஷ்யாவின் விரோத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் கலப்பினப் போர் ஆபத்து அதிகரித்து இருப்பதாகவும் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எலிசி அரண்மனையில் செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு வியூகங்களை ஏற்படுத்தவும், விரிவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கான உத்தரவையும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய காலத்தில் ரஷ்யா முன்னெடுத்து வரும் அத்துமீறிய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய மக்ரோன் , இதற்கான பதிலடிகள் நிச்சயமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
எங்களை அச்சுறுத்துவதும், உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்பதை முடக்குவதுமே ரஷ்யாவின் நோக்கம் என்றும், ஆனால் அதற்கு நேர்மாறான பலன்கள் மட்டுமே ரஷ்யாவிற்கு கிடைக்கும் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று நம்முடைய பாதுகாப்பும், நாளை நம்முடைய பாதுகாப்பும் உக்ரைனிடம் தான் அடங்கியுள்ளது நாம் நன்கு அறிவோம் என்பதால் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதை தடுப்பதற்காக ரஷ்யா இத்தகைய அத்துமீறிய தாக்குதலில் ஈடுபடுவதாக பல்வேறு ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் இந்த கருத்தும் அதனுடன் ஒத்துப் போகிறது.