மேக்ரான் அணிந்திருந்த சன்கிளாஸ்... ஒரே நாளில் பல மில்லியன் டொலர் தொகையைக் குவித்த நிறுவனம்
Top Gun திரைப்பட பாணியில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அணித்திருந்த சன்கிளாஸ் உலகம் மொத்தம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனம் ஒரே நாளில் பல மில்லியன் டொலர் தொகையைக் குவித்துள்ளது.
ஒரே நாளில் உச்சம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சன்கிளாஸ் அணிந்தவண்ணம் கூட்டத்தில் உரையாற்றினார்.

அச்சம்பவம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மேக்ரான் அணித்திருந்த சன்கிளாஸ் தயாரிப்பு நிறுவனமான iVision Tech-ன் பங்கு விலைகள் ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது.
வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றியதன் பின்னரே பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
பிரபலமான Henry Jullien சன்கிளாஸ்களை தயாரிக்கும் iVision Tech நிறுவனம் தெரிவிக்கையில், மேக்ரான் அணிந்திருந்த அந்த சன்கிளாஸானது Pacific S 01 எனவும், அதன் விலை 770 டொலர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, மேக்ரான் தனிப்பட்ட காரணங்களுக்காக அன்று சன்கிளாஸ் பயன்படுத்தியிருந்தாலும், தங்கள் நிறுவனத்திற்கு திடீரென்று கிடைத்த ஜாக்பாட் அதுவென்றும் தலைமை நிர்வாக அதிகாரி Stefano Fulchir தெரிவித்துள்ளார்.
சந்தை மதிப்பு
மேக்ரானால், தங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.1 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், 1986ல் வெளியான Top Gun திரைப்பட பாணியில் மேக்ரான் காணப்பட்டதும், இணையவாசிகள் மொத்தம் கேலியும் கிண்டலும் என மேக்ரானை வறுத்தெடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த சன்கிளாஸ் விடயத்தில் கேலி பேசியிருந்தார். உள்ளரங்கில் நடைபெற்ற உரையின் போது மேக்ரான் சன்கிளாஸ் அணிந்திருந்ததற்கான காரணம், கண்ணில் உள்ள ஒரு இரத்தக் குழாய் வெடித்ததால் கண்களைப் பாதுகாப்பதற்காகவே என்று ஜனாதிபதி மேக்ரானின் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

ஆனால் அவர் அணிந்திருந்த சன்கிளாஸ் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என குறிப்பிடவில்லை. இருப்பினும், 2024ல் தாங்கள் மேக்ரானுக்கு அளித்த Henry Jullien சன்கிளாஸ் அது என Stefano Fulchir உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை மட்டும் இதன் பங்கு விலைகள் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை மீண்டும் அதன் விலையில் சாதனை உயர்வு காணப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |