எகிப்தில் பிரான்ஸ் ஜனாதிபதி... காசாவை ஆள்வதில் ஹமாஸுக்கு பங்கிருக்கக்கூடாது என வலியுறுத்தல்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றுள்ளார்.
அங்கு, ஜோர்டான் மன்னரையும், எகிப்தின் ஜனாதிபதியையும் சந்திக்கிறார் மேக்ரான்.
எகிப்தில் பிரான்ஸ் ஜனாதிபதி...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எகிப்து சென்றுள்ள காட்சிகள் வெளியாகிவருகின்றன.
காசா தொடர்பிலான உச்சி மாநாடு ஒன்றிற்காக மேக்ரான் எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றுள்ள நிலையில், மக்கள் பெருந்திரளாகக் கூடி அவரை வரவேற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மேக்ரானும் எகிப்து ஜனாதிபதியும் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது பேசிய மேக்ரான், காசாவை ஆள்வதில் ஹமாஸுக்கு பங்கிருக்கக்கூடாது என வலியுறுத்தினார். v
அதைத் தொடர்ந்து மேக்ரானும், எகிப்து ஜனாதிபதியான Abdel Fattah al-Sisiயும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள்.
பின்னர், ஜோர்டான் மன்னரும், எகிப்தின் ஜனாதிபதியும், மேக்ரானும் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |