பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான்: பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது
பிரான்ஸ் நிர்வாகம் ஒருபோதும் சிறு படகுகளின் வருகையை தடுத்து நிறுத்தாது என்றும், பிரித்தானியாவால் பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ளதை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் அறிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு போட்டியிடும் ராபர்ட் ஜென்ரிக், சிறு படகுகள் விவகாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் குடிவரவு அமைச்சராக இருந்த போது பிரான்ஸ் நிர்வாகத்துடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ராபர்ட் ஜென்ரிக் முயன்றதாக அம்பலமான நிலையிலேயே அவர் மேக்ரானை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிகவும் விவாதத்துக்குரிய அந்த ஒப்பந்தமானது பிரான்சுக்கு ரிஷி சுனக் முன்வைத்ததாகவும், ஆனால் சுதாரித்துக்கொண்ட மேக்ரான் அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க மறுப்பதாக
அந்த ஒப்பந்தம் தொடர்பில் விளக்கம் கேட்கவும் மேக்ரான் தயாராக இல்லை என்றும், அவர் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை என்றும், Brexit காரணமாக பிரித்தானியாவை தண்டிக்கவே அவர் விரும்பினார் என்றும் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
நாளையே பிரான்ஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்கலாம். ஆனால் தாம் கற்றுக்கொண்ட வகையில், பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது என்றார்.
Calais பகுதியில் புலம்பெயர் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் தடுக்கவும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் தொகையை பிரித்தானியா அளித்து வருகிறது.
இவ்வளவு பெரும் தொகையை பெற்றுக்கொண்டும், பிரான்ஸ் நிர்வாகம் சட்டவிரோத புலம்பெயர் மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவே ராபர்ட் ஜென்ரிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |