அமைதி நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால்... ரஷ்யாவுக்கு மேக்ரான் எச்சரிக்கை
உக்ரைனுடனான அமைதி நடவடிக்கைகளில் புடின் முன்னோக்கிச் செல்லவில்லையென்றால் ரஷ்யா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் செய்தி
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியான புடினும் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பும் சந்தித்துப் பேசிக்கொண்ட நிலையில், மேக்ரான் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், உக்ரைனுடனான அமைதி நடவடிக்கைகளில் புடின் முன்னோக்கிச் செல்லவில்லையென்றால் ரஷ்யா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்று கூறினார்.
உக்ரைன் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை செய்ய இயலும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அமைதி ஒப்பந்தம் ஒன்றையே விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நம்புவதாக மேக்ரான் தெரிவித்தார்.
ஆனால், கடைசியில் அதை அவர் நிராகரித்தாரானால், நாங்களும் தடைகளை அதிகரிப்போம் என கூற தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |