ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை! வெளிப்படையாக கூறிய பிரான்ஸ் பிரதமர்
ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 10ம் திகதி நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவிகித வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவிகித வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
தீவிர இடதுசாரி தலைவரான Jean Luc Melenchon 22 சதவிகித வாக்குகளை பெற்று 3வது இடம்பிடித்தார்.
முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், அதாவது 50 சதவித வாக்குகளுக்கு மேல் யாரும் பெறவில்லை என்பதால், ஏப்ரல் 24ம் திகதி 2வது சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மக்ரோன்-மரைன் லு பென் மோதுகின்றனர்.
காபூல் பள்ளியை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு.. குழந்தைகள் பலியானதாக அச்சம்
இந்நிலையில், பிரான்ஸ் இன்டர் ரேடியோவில் பேசிய பிரான்ஸ் பிரதமர் Jean Castex, ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப்பெறுவார்கள் என தெரியவில்லை.
இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. போட்டி இன்னும் முடியவில்லை.
ஒருவர் மக்ரோனையும் மரைன் லு பென்னையும் ஒரே மட்டத்தில் வைப்பார். ஆனால் முக்கிய வேறுபாடுகள் உள்ளன என Jean Castex தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24ம் திகதி நடைபெறும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் மக்ரோன் முன்னிலைப் பெறுவார் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.