ரூ.1.45 கோடியில் Made-in-India 2025 Range Rover Sport அறிமுகம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2025 Range Rover Sport ரூ.1.45 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Tata Motors-க்கு சொந்தமான ஆடம்பர பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) வியாழனன்று (டிசம்பர் 19) இந்திய சந்தையில் மேட்-இன்-இந்தியா எஸ்யூவி Range Rover Sport-ஜ அறிமுகப்படுத்தியது.
முன்புறம் மசாஜ் இருக்கைகள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு எஸ்யூவி இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் P400 Dynamic HSE மற்றும் D350 Dynamic HSE ஆகியவை அடங்கும்.
மேலும், இந்த இரண்டு வேரியண்டின் விலையும் ரூ.1.45 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்டை விட ரூ.5 லட்சம் அதிக விலை கொண்டது, ஏனெனில் நிறுவனம் இந்த காரின் Dynamic SE மாறுபாட்டை நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் Porsche Cayenne (ரூ .1.43 கோடியில் தொடங்குகிறது) மற்றும் BMW X 7 (ரூ .1.3 கோடியில் தொடங்குகிறது) போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் 8 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது தற்போது, Land Rover Range Rover வரிசையில் Range Rover, Range Rover Sport, Range Rover Velar மற்றும் Range Rover Evoque ஆகியவை உள்ளன.
இது தவிர, Range Rover ஒரு முழு மின்சார SUVயையும் தயார் செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jaguar Land Rover launches 2025 Range Rover Sport, Made-In-India Range Rover Sport SUV