சாதத்துடன் சாப்பிடுவதற்கு மாதம்பட்டி ரங்கராஜின் சிறுவாணி சிக்கன் செய்வது எப்படி?
மாதம்பட்டி என்றாலே தற்போது அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது நடிகர் ரங்கராஜ் தான்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பிரபலமான சமையல்காரராகவும் இருக்கிறார்.
இவர் தற்போது குக் வித் கோமாளி என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்து, அவருடைய சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.
எப்போதும் செட்டிநாடு சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன் சாப்பிட்டு தான் பழக்கம். அது என்ன சிறுவாணி சிக்கன் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கும்.
சிறுவாணி தண்ணீர் என்பது உலகிலேயே மிகவும் சுவையான தண்ணீராக கருதப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் கொண்டு எந்த உணவை சமைத்தாலும் அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில் மாதம்பட்டி ரங்கராஜின் சிறுவாணி சிக்கன் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானவை
-
எலும்பில்லாத சிக்கன்
- சின்ன வெங்காயம்
-
வர மிளகாய்
- துவரம் பருப்பு
- பூண்டு
- மஞ்சள் தூள்
-
கறிவேப்பிலை
செய்முறை
-
முதலில் மிக்ஸியில் சின்ன வெங்காயம், வர மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு விழுது பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து எலும்பில்லாத கோழியை மஞ்சள் சேர்த்து கழுவவும்.
-
பின் அரைத்து வைத்துள்ள விழுதை, கழுவிய கோழியின் மீது தடவ வேண்டும்.
- அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
- பிறகு ஓர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
-
5 நிமிடத்திற்கு வதக்கியவுடன் சின்ன வெங்காயம் பொன்னிறத்திற்கு மாறும், அதன்போது ஊற வைத்திருந்த கோழியை சேர்க்கவும்.
- இவ்வாறு இது கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில், துவரம் பருப்பை தண்ணீரில் வேக வைத்து தனியாக எடுக்கவும்.
-
அந்த பருப்பு தண்ணீரை சிக்கனில் ஊற்றில் வேக மிதமான தீயில் 8 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
- பின் உப்பு சரிவர பார்த்து, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான சிறுவானி சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |