ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாதவன் மகன் - 0.22 வினாடியில் பறிபோன வாய்ப்பு
madhavan son vedaant competes in asian games fails to qualify for final:ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற நீச்சல் வீரரான மாதவன் மகன் வேதாந்த் 0.22 வினாடியில் இறுதிச்சுற்று வாய்ப்பு பறிபோகியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் மாதவன் மகன்
20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், ஆடவர் 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே பிரிவில், 13 நாடுகள் கலந்து கொண்டதில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணியில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் இடம் பெற்றிருந்தார். அவருடன் அணியில், சஜன் பிரகாஷ், தக்ஷன் சசிகுமார் மற்றும் அனீஷ் சுனில் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இந்திய அணி, 7:24.32 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து 9வது இடத்தை பிடித்ததால் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த போட்டி குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இறுதிப் போட்டிக்கு 0.2 புள்ளிகள் வித்தியாசத்திலும், சிறந்த இந்திய வீரராக 0.5 புள்ளிகள் வித்தியாசத்திலும் வாய்ப்பைத் தவறவிட்டேன். மறுநாள் 200 புள்ளிகள் இலவசம்" என்று வேதாந்த் மாதவன் பதிவிட்டிருந்தார்.

அவரது தந்தை மாதவன், நன்றி தெரிவிக்கும் எமோஷனுடன் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்தார்.
வேதாந்த் மாதவன் நாளை நடைபெற உள்ள ஆடவர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியிலும், செப்டம்பர் 25 அம திகதி 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.
வேதாந்த், முன்னதாக 2022 ஃபினா உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப், 2023 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

லாட்வியா ஓபன், டேனிஷ் ஓபன்,மலேசிய வயதுக் குழு சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பல்வேறு நீச்சல் பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார்.