ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி - 3 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சோகச் சம்பவம்!
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி, 3 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை வரவழைத்துள்ளது.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மரணம்
மத்தியப்பிரதேசம், முங்காவல்லி என்ற கிராமத்தில் கடந்த 6ம் தேதி வீட்டு வாசலில் இரண்டரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, வீட்டு அருகே தோண்டப்பட்டிருந்த 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.
இதை அறிந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தேசிய மீட்புப் படையினரை வரவழைத்தனர். இதனையடுத்து, தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டது.
சிறுமியை மீட்கும் பணி
ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்தது. முதலில் 50 அடியில் சிக்கியிருந்த குழந்தை, குழி தோண்டப்படும் இயந்திரங்களின் அதிர்வால் 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. குழந்தை மீட்கும் பணி பொலிசாருக்கு கடும் சவாலாக இருந்தது.
இதனையடுத்து, 55 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நேற்று குழந்தை மீட்கப்பட்டது. அப்போது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதன் பின்பு, போர்வெல் கிணற்றின் உரிமையாளர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.