வலியில் கதறும் பெண்! ஊரே பார்க்க அடித்து உதைத்து கொடுமைப் படுத்திய குடும்பத்தினர்! வெளியான அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் 2 இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்து, மிதித்து, அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து கொடுமைப் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக, ஆற்றங்கரையில் வைத்து அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
இந்த கொடூரமான வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
Madhya Pradesh: Two #girls were beaten by her cousin brothers as they talked to someone on phone in Pipalwa village under Tanda police station in Dhar district on June 25, 2021. This is second incident of barbarity after a woman was thrashed in #Alirajpur district last week pic.twitter.com/RGGw5QOn9M
— Free Press Journal (@fpjindia) July 4, 2021
டண்டா (Tanda) காவல் நிலைய அதிகாரியின் கூற்று படி, இந்த சம்பவம் கடந்த ஜூன் 22-ஆம் திகதி தார் (Dhar) மாவட்டத்தில் பிபால்வா (Pipalwa) கிராமத்தில் நடந்துள்ளது. ஆனால், இதன் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்ட பிறகே ஜூன் 25-ஆம் திகதி காவல் துறைக்கு தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட 19 மற்றும் 20 வயது பெண்கள், முதலில் புகாரை பதிவு செய்ய மிகவும் பயந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பிறகு, அந்த பெண்களில் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பெண்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இரு பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.