நேருக்கு நேராக 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து! தீ பிடித்து எரிந்த இஞ்சின்
மத்திரபிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.
நேருக்கு நேராக மோதிய ரயில்
மத்திய பிரதேச மாநிலத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே, இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
@ani
இரண்டு ரயில்கள் மோதிய வேகத்தில் ஒரு ரயிலின் இஞ்சின் மற்றொரு ரயிலின் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் ஒரு ரயிலின் இஞ்சின் தீ பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
@ani
இதனை அறிந்த பொலிஸாரும். தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரயில் சேவை ரத்து
இந்த விபத்தின் காரணமாக அந்த நிலையத்திற்கு செல்லும் பல ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
@ani
“ பிலாஸ்பூரிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் கட்னி பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில், சீங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியில் விபத்து ஏற்பட்டுள்ளது” என ரயில்நிலைய துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரயிலின் எஞ்ஜின் பாகம் தீ பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பீகார் மாநிலம் முசாப்பூரை சேர்ந்த ராகுல் பிரசாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
#WATCH | Shahdol, MP: Two goods trains collided with each other near Singhpur railway station. The engines of the trains caught fire after the collision. The drivers have been injured, and two railway workers feared trapped. pic.twitter.com/3cEyCfA7xP
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 19, 2023
தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.