காதல் தோல்வியால் ஆட்டை திருமணம் செய்து கொண்ட இளைஞர்
காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்கள், பெரும்பாலும் அதில் இருந்து மீண்டும் வேறு திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கையை தொடர்வார்கள்.
சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், விபரீத முடிவெடுப்பது உண்டு. ஒரு சிலர் விதிவிலக்காக காதல் தோல்விக்கு பின்னர், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்துவார்கள்.
காதல் தோல்வியால் ஆட்டுடன் திருமணம்
ஆனால் இளைஞர் ஒருவர் தனது காதல் நிராகரிக்கப்பட்ட பின்னர் ஆடு ஒன்றை திருமணம் செய்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், காதல் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தான் வளர்த்து வந்த ஆட்டின் கழுத்தில் மாலையிட்டு, அதற்கு பொட்டு வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
மேலும் அந்த ஆட்டிற்கு பூஜா என பெயரிட்டுள்ளார். நான் இந்த ஆட்டை பல மாதங்களாக வளர்த்து வருகிறேன். அது என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் இந்த முடிவை எடுத்துளேன் என பகவான் சிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |