இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை!
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு உரிய ராயல்டி வழங்காமல் அவரது இசையை பயன்படுத்தி வந்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது இளையராஜாவின் இசையை தொடர்ந்து பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.
எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அவரது இசையை அந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
அதாவது ஒப்பந்த முடிந்தும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.