Madras Samayal யூடியூப் சேனலின் மொத்த வருமானம்.., எத்தனை லட்சங்கள் தெரியுமா?
பலரும் சமையல் கற்றுக்கொள்ள அல்லது ஏதேனும் ஒரு உணவை சமைக்க யூடியூப் பார்த்து அதனை கற்றுக்கொண்டு செய்வார்கள்.
அப்படி யூடியூபில் பிரபலமாக இருக்கு தமிழ் சமையல் சேனல்களில் ஒன்று மெட்ராஸ் சமையல்(Madras Samayal) சேனல்.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனலில் தற்போது 6.18 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்து, அதன் பிறகு HCL நிறுவனத்தில் சில வருடங்கள் வேலை செய்தவர் ஸ்டெஃபி என்ற பெண்.
இவர் அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.
அவரது கணவர் கொடுத்த ஐடியாவால் youtube சேனல் தொடங்கி Madras Samayal என்ற பெயரில் சமையல் வீடியோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
இவர் தனது குழந்தைகளையும் கவனித்து கொண்டு தான் சமையல் வீடியோ ஷூட் செய்து எடிட் செய்து வெளியிடும் வேலைகளையும் செய்து வருகிறாராம்.
தற்போது தமிழ் இணையத்தில் மிகவும் பிரபலமான சேனல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது மெட்ராஸ் சமையல்.
மெட்ராஸ் சமையல் சேனல் மூலமாக இவர் மாதம் சுமார் 2 லட்சம் ருபாய் வரை வருமானம் வருகிறதாம்.
அதேபோல அவர் Steffi Ulagam என்ற தனிப்பட்ட vlog சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அதன் மூலமாகவும் அவருக்கு மாதம் 1 லட்சம் வரை வருமானம் வருகிறது என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |